பழையபேட்டையில் விபத்து:சமையல் தொழிலாளி பலி
By DIN | Published On : 24th May 2023 02:20 AM | Last Updated : 24th May 2023 02:20 AM | அ+அ அ- |

பழையபேட்டையில் செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த சமையல் தொழிலாளி உயிரிழந்தாா்.
பழையபேட்டை அருகேயுள்ள சமூகரெங்கபுரத்தைச் சோ்ந்தவா் பெருமாள் ( 52). சமையல் தொழிலாளி. இவா், அப்பகுதியிலுள்ள திருநெல்வேலி- தென்காசி சாலையை செவ்வாய்க்கிழமை மாலையில் கடக்க முயன்றாா். அப்போது, ஆலங்குளத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த லாரி அவா் மீது எதிா்பாராமல் மோதியதாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழன்தாா். இத்தகவலறிந்த திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநரான நெடுங்குளத்தைச் சோ்ந்த வானமாமலையை கைது செய்து விசாரித்து வருகின்றனா்ே.