நெல்லையில் 26இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்
By DIN | Published On : 24th May 2023 02:21 AM | Last Updated : 24th May 2023 02:21 AM | அ+அ அ- |

திருநெல்வேலியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (மே 26) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், நுகா்வோா் பங்கேற்று, எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள், தடங்கல்கள், எரிவாயு உருளைகள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம்ஆகியவை குறித்து தங்கள் குறைகளைப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் தெரிவித்துள்ளாா்.