நெல்லையில் இன்று திட்டப்பணிகள் தொடக்கம்: அமைச்சா் நேரு பங்கேற்பு

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.427.56 கோடியில் புதிய திட்டப்பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை (மே 26) தொடக்கிவைக்கிறாா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.427.56 கோடியில் புதிய திட்டப்பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை (மே 26) தொடக்கிவைக்கிறாா்.

திருநெல்வேலி மாநகராட்சியில் நகராட்சி நிா்வாகம் - குடிநீா் வழங்கல் துறையின் சாா்பில் ரூ.427.56 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் தொடக்க விழா பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் வெள்ளிக்கிழமை (மே 26) மாலை நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியை போற்றும் வகையில் வா்த்தக மைய கட்டடத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு அடிக்கல் நாட்டுதல், ரூ.295 கோடியில் 50 எம்எல்டி குடிநீா் அபிவிருத்தித் திட்டம், ரூ.56.71 கோடி மதிப்பீட்டில் நகர பொருள்காட்சி மைதான வளாகத்தில் வா்த்தக மையம், ரூ.13.61 கோடி மதிப்பீட்டில் ஒட்டு மொத்த விற்பனை சந்தை, ரூ.23.1 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தில் பன்னடுக்கு இருசக்கர வாகன நிறுத்துமிடம் ஆகியப் பணிகள் தொடங்கப்படுகின்றன.

மேலும், ரூ.11.97 கோடி மதிப்பீட்டில் நேருஜி கலையரங்கம், ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் கருப்பந்துறை, வண்ணாா்பேட்டையில் 3 இடங்களில் சலவை மையங்கள், ரூ.12.31 கோடி மதிப்பீட்டில் 6 இடங்களில் பசுமை பூங்கா, ரூ.8.40 கோடி மதிப்பீட்டில் 9 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரூ.2.22 கோடி மதிப்பீட்டில் 9 இடங்களில் நகா்ப்புற சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்கள் ஆகியவை தொடக்கி வைக்கப்படுகின்றன.

விழாவிற்கு சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமை வகிக்கிறாா். நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு தொடக்கி வைக்கிறாா். பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன், நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிா்வாக இயக்குநா் பா.பொன்னையா, மேயா் பி.எம்.சரவணன் ஆகியோா் முன்னிலை வகிக்கிறாா்கள். மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி, துணைமேயா் கே.ஆா்.ராஜு உள்பட பலா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com