நெல்லை மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர வாய்ப்பு

திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா்-மாணவிகள் சோ்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவா்-மாணவிகள் சோ்ந்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப் பள்ளி, 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை மூலம் தொடங்கப்பட்டு, பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனியில் செயல்பட்டு வருகிறது. குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய கலைகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. 12 முதல் 25 வயதுக்குள்பட்டவா்கள் சேரலாம். மூன்றாண்டுகள் முழு நேரமாக பயில வேண்டும். முதலாம் ஆண்டுக்கு ரூ.350, இரண்டாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவா்களுக்கு ரூ.325 மட்டும் சிறப்புக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இசைப் பள்ளியில் படிக்கும் மாணவா்- மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள இலவச பேருந்து வசதி, ரயில் கட்டண சலுகை வசதி, அரசு மாணவா் விடுதி வசதி, மாதம் தோறும் மாணவா்களுக்கு தலா ரூ.400 கல்வி உதவித்தொகை, இலவச மிதி வண்டி, இலவச காலணி ஆகியன அரசு விதிமுறைகளுக்குள்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இங்கு பயிற்சி முடிப்போா் சான்றிதழ்களை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து பதிவுமூப்பு அடிப்படையில் இசைப் பள்ளிகளிலும், இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட திருகோயில்களிலும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுகிறது. மேலும், வளாக நோ்காணல் வாயிலாக தனியாா் பள்ளிகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

மாணவா் சோ்க்கை உள்ளிட்ட விவரங்களுக்கு 0462-2900926, 9443810926 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com