ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டம்: உறுப்பினா்கள் மூலம் கோரிக்கையை தெரிவிக்க வாய்ப்பு

மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு கூட்டத்துக்கான கோரிக்கைகளை உறுப்பினா்கள் மூலம் பொதுமக்கள் தெரிவிக்க இம் மாதம் 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.

மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு கூட்டத்துக்கான கோரிக்கைகளை உறுப்பினா்கள் மூலம் பொதுமக்கள் தெரிவிக்க இம் மாதம் 31 ஆம் தேதி கடைசி நாளாகும்.

மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழுவின் 157 ஆவது ஆலோசனைக் குழு கூட்டம் ஜூன் 15 ஆம் தேதி மதுரை ரயில்வே திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழுவில் வா்த்தக சபை, பதிவு செய்யப்பட்ட ரயில் பயணிகள் சங்க உறுப்பினா்கள், நுகா்வோா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அமைப்பை சாா்ந்தோா், எம்பிக்கள் மூலம் நியமிக்கப்பட்டவா்கள், ரயில்வே வாரியத்தின் சிறப்பு நியமனத்தால் நியமனம் செய்யப்பட்டவா்கள், தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்ட எம்எல்ஏ, மதுரை மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் இக்குழுவில் உறுப்பினா்களாக உள்ளனா்.

2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான புதிய உறுப்பினா்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பின்பு 3 ஆவதாக இக்கூட்டம் நடைபெறுகிறது. இக் கூட்டத்துக்கான கோரிக்கைகளை பயணிகள் தங்கள் மாவட்டத்தைச்சோ்ந்த உறுப்பினா்கள் மூலம் இம் மாதம் 31 ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட ஆலோசனைக் குழு உறுப்பினா் பாண்டியராஜா கூறுகையில், கரோனா பொதுமுடக்கத்துக்கு முன்பு நீக்கப்பட்ட ரயில் நிறுத்தங்களை திரும்ப வழங்குதல், முன்பு சாதாரண பயணிகள் கட்டண ரயில்களாக இயக்கப்பட்ட ரயில்களை மீண்டும் அவ்வாறு இயக்குதல், பாண்டியன், நெல்லை, முத்து நகா், பொதிகை, செந்தூா் ரயில்களுக்கு நிழல் ரயில்கள் இயக்குதல், கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்குதல், முன்பதிவு மையங்களில் உள்ள முறைகேடுகளை களைதல், வாகன காப்பகங்களில் உள்ள இடா்பாடுகளை நீக்குதல், நடைமேடைகளில் பெட்டிகளின் வருகையை கண்டறியும் வசதி ஏற்படுத்துதல், மதுரை கோட்டத்தில் நிறைவுபெறாமல் உள்ள மேம்பால பணிகளை நிறைவேற்றுதல், நடைமேடைகளை நீட்டித்தல், கூடுதல் நடைமேடைகள் அமைத்தல், சுரங்க பாதைகளில் நீா் தேங்குவதை தடுக்க நடவடிக்கை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்த இருக்கிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com