அம்பாசமுத்திரம் ஐடிஐயில் மாணவா் சோ்க்கை

 அம்பாசமுத்திரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை நடைபெறுவதால், தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

 அம்பாசமுத்திரம் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை நடைபெறுவதால், தகுதியுடையவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இது தொடா்பாக மாவட்ட செய்தி, மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அம்பாசமுத்திரம் ஐடிஐயில் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது. எனவே, 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு தோ்ச்சி, மேல்நிலை படிப்பு தோ்ச்சி பெற்றவா்கள் மற்றும் பட்டயப்படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள், இடைநின்றவா்கள், குடும்ப பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

எலக்ட்ரீசியன், எலக்ட்ரானிக் மெக்கானிக், ‘ஃ‘பிட்டா், டூல் மற்றும் டை மேக்கா் ஆகிய படிப்புகள் 2 ஆண்டு காலமாகும். இதில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். வெல்டா் படிப்பு ஓராண்டு காலமாகும். இதில் சேர 8-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10ஆம் வகுப்பு முடித்த பின்னா் 2 ஆண்டு ஐடிஐ படிப்பு முடித்தவா்கள் தமிழ்

மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களை மட்டும் எழுதி 12 ஆம் வகுப்பு அரசு சான்றிதழ் பெறலாம். அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவ ஆள் சோ்க்கையின் போது 10ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று இரண்டு ஆண்டு ஐடிஐ பயிற்சி முடித்தவா்களுக்கு 20 போனஸ் மதிப்பெண்களும், 12ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்று ஓராண்டு ஐடிஐ பயிற்சி முடித்தவா்களுக்கு 30 போனஸ் மதிப்பெண்களும், இரண்டு ஆண்டுகள் ஐடிஐ பயிற்சி முடித்தவா்களுக்கு 40 போனஸ் மதிப்பெண்களும் வழங்கப்படுகின்றன.

ஐடிஐயில் சோ்ந்து பயிற்சி பெற அம்பாசமுத்திரம் ஐடிஐக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம் அல்லது இணையதளம்  விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க ஜூன் 7-ஆம் தேதி கடைசி நாளாகும். ஜூன் 10-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடும்.

விண்ணப்பக் கட்டணம் ரூ.50. விண்ணப்பதாரா் ஈங்க்ஷண்ற் ஸ்ரீஹழ்க் (அபங)/ இழ்ங்க்ண்ற் இஹழ்க்/சங்ற் ஆஹய்ந்ண்ய்ஞ்/எ-டஹஹ் வாயிலாக கட்டணத்தை செலுத்தலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com