கே.டி.சி. நகரில் அமைச்சருக்கு வரவேற்பு
By DIN | Published On : 26th May 2023 11:34 PM | Last Updated : 26th May 2023 11:34 PM | அ+அ அ- |

திருநெல்வேலி மாவட்டத்துக்கு வந்த அமைச்சா் கே.என். நேருவுக்கு, பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.
ராதாபுரம், பாளையங்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தூத்துக்குடியில் இருந்து காா் மூலம் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு வந்தாா்.
அவருக்கு, திருநெல்வேலி மாவட்ட பாா்வையாளரும், பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சருமான ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தலைமையில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு. அப்துல்வஹாப், துணை மேயா் கே.ஆா். ராஜு மற்றும் திமுகவினா் வரவேற்பு அளித்தனா்.
இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினா் பேச்சிபாண்டியன், பாளை. மண்டல தலைவா் பிரான்சிஸ், வழக்குரைஞா் தினேஷ், மாமன்ற உறுப்பினா்கள் ஷேக் மன்சூா், சங்கா், உலகநாதன், கிட்டு, அஜய், காசிமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.