திருநெல்வேலி: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறன் மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பாளையங்கோட்டை அண்ணா விளையாட்டு மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இப்போட்டிகள் ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் தொடங்கி வைத்தாா். 11 சிறப்புப்பள்ளிகளில் இருந்து 293 மாற்றுத்திறன் மாணவ, மாணவியா் கலந்து கொண்டனா்.
100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், குண்டு எறிதல், 400 மீ. ஓட்டம், தொடா் ஓட்டம், நீளம் தாண்டுதல், கிரிக்கெட் பந்து எறிதல், தடை தாண்டி ஓடுதல் உள்ளிட்ட விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன.
இப்போட்டிகளில் வென்றவா்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்கும் தகுதி பெற்றவா்கள் ஆவா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சு.சிவசங்கரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் (பொறுப்பு) சக்கரவா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.