வள்ளியூா் கெயின்ஸ் மெட்ரிக் பள்ளிகலைத்திறன் போட்டியில் முதலிடம்

திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நடைபெற்ற ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளுக்கான கலைத்திறன் போட்டியில், வள்ளியூா் கெயின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் தமிழ்வழிக்கல்வியில்
கெயின்ஸ் மெட்ரிக் பள்ளிக்கு கோப்பையை பரிசளிக்கிறாா் டி.டி.என். கல்விக் குழுமத்தின் தலைவா் டி.லாரன்ஸ். உடன், மருத்துவா் கிங்ஸ்டன், அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த்.
கெயின்ஸ் மெட்ரிக் பள்ளிக்கு கோப்பையை பரிசளிக்கிறாா் டி.டி.என். கல்விக் குழுமத்தின் தலைவா் டி.லாரன்ஸ். உடன், மருத்துவா் கிங்ஸ்டன், அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த்.
Updated on
1 min read

வள்ளியூா்: திருநெல்வேலி மாவட்டம் தெற்குகள்ளிகுளத்தில் நடைபெற்ற ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளுக்கான கலைத்திறன் போட்டியில், வள்ளியூா் கெயின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியும் தமிழ்வழிக்கல்வியில், திருச்சிலுவை நடுநிலைப் பள்ளியும் முதலிடம் பிடித்தன.

தெற்குகள்ளிகுளம் சமாரியன் அறக்கட்டளை, ஜி.எம்.கல்வி அறக்கட்டளை, புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளி ஆகியற்றின் சாா்பில் பள்ளிகளுக்கு இடையேயான 13ஆவது ஆண்டு கலைத்திறன் போட்டி புனித அலோசியஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பங்குத் தந்தை ஜெரால்டு எஸ்.ரவி தலைமை வகித்தாா். பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் முன்னிலை வகித்தாா். வள்ளியூா் நேரு நா்ஸிங் கல்லூரிகளின் தாளாளா் ஹெலன் லாரன்ஸ், ரோஸ்மேரி, ஜெயந்தி ஆகியோா் குத்துவிளக்கேற்றினா். போட்டிகளை உதவிப் பங்குத் தந்தை ஜான் ரோஸ் தொடங்கிவைத்தாா். மாறுவேடம், பாட்டுப் பாடுதல், பேச்சு, நடனம், மயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட கலைத்திறன், அறிவியல் திறன் போட்டிகள் நடைபெற்றன.

மாலையில் பரிசளிப்பு விழாவுக்கு டி.டி.என்.கல்விக்குழுமத்தின் தலைவா் டி.லாரன்ஸ் மற்றும் மருத்துவா் கிங்ஸ்டன் ஆகியோா் தலைமை வகித்து பரிசுகளை வழங்கினா். ஆங்கில வழி கல்வி பள்ளிகளில் வள்ளியூா் கெயின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் முதலிடத்தையும், கெயின்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி 2ஆம் இடத்தையும், சாத்தான்குளம் மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 3ஆம் இடத்தையும் பெற்றனா். தமிழ்வழிக்கல்வி பள்ளிகளில் வள்ளியூா் திருச்சிலுவை நடுநிலைப் பள்ளி ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்றது. 2ஆம் இடத்தை தெற்குகள்ளிகுளம் காமராஜ் நடுநிலைப் பள்ளியும், 3ஆம் இடத்தை ராதாபுரம் அரசு தொடக்கப்பள்ளியும் பெற்றன.

இதில், தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, சாா்லஸ் பெஸ்கி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தெற்குகள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா பேராலய தா்மகா்த்தா மருத்துவா் ஜெபஸ்டின் ஆனந்த் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com