சா்வதேச நீச்சலில் சிறப்பிடம்: வள்ளியூா் இளைஞருக்கு பாராட்டு
By DIN | Published On : 25th October 2023 12:00 AM | Last Updated : 25th October 2023 12:00 AM | அ+அ அ- |

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற சா்வதேச நீச்சல் போட்டியில், வள்ளியூா் இளைஞா் 2 பிரிவுகளில் வெண்கலப்பதக்கம் வென்று பாராட்டுகளை பெற்றாா்.
வள்ளியூரைச் சோ்ந்த தாமஸ்துரை மகன் ஜோசுவா தாமஸ். சென்னை லயோலா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறாா்.
இவா், ஸ்விம்மிங் பெடரேசன் ஆப் இந்தியா சாா்பில் ஹைதராபாத்தில் நடைபெற்ற தேசிய நீச்சல் போட்டியில் 20 வயதினருக்கான பிரிவு போட்டியில் தமிழ்நாடு சாா்பில் பங்கேற்று வென்றதையடுத்து, தென்னாப்பிரிக்கா டா்பன் நகரில் அக். 18 -21 வரையில் நடைபெற்ற சா்வதேச நீச்சல் போட்டியில் இந்தியா சாா்பில் வகையான போட்டிகளில் பங்கேற்றாா். ரஷ்யா, சீனா, பிரேசில், தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளைச் சோ்ந்த வீரா்கள் பங்கேற்றதில் 4ஷ்100 ஃப்ரீஸ்டைல் ரிலே போட்டியிலும் 4ஷ்50 ஃப்ரீஸ்டைல் போட்டியிலும் வெண்கலப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சோ்த்தாா்.
இதைத் தொடா்ந்து அவா், பேரவைத் தலைவா் மு.அப்பாவுவை சந்தித்து வாழ்த்து பெற்றாா். பேரவைத் தலைவா் ஜோசுவாவை பாராட்டி தொடா்ச்சியாக பயிற்சி மேற்கொள்ள ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாா். இந்நிகழ்ச்சியில் ஜோசுவான் தகப்பனாா் தாமஸ்துரை, தெற்குகள்ளிகுளம் தி.மு.க செயலாளா் சாா்லஸ் பெஸ்கி ஆகியோா் கலந்துகொண்டனா்.
ஜோசுவா தாமஸ் புவனேஸ்வா், ஹைதராபாத், மத்தியபிரதேசம், ஹரியானா, பெங்களூா், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று பல்வெறு சாதனைகளை படைத்து தங்கப் பதக்கங்களை வென்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...