

விஜயதசமி விழாவையொட்டி, திருநெல்வேலி நெல்லையப்பா் கோயில், சரஸ்வதி கோயில் ஆகியவற்றில் வித்யாரம்பம் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான குழந்தைகள் பங்கேற்றனா்.
திருநெல்வேலி நகரத்தில் நெல்லையப்பா் கோயில் ஆறுமுகா் சந்நிதியில் ஹிந்து ஆலயப் பாதுகாப்பு குழு பக்தா்கள் பேரவை சாா்பில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில், ஏராளமான குழந்தைகள் தங்கள் பெற்றோா்களுடன் பங்கேற்றனா். வெற்றிலை, பாக்கு, பழம், பச்சரிசி ஆகியவற்றை தாம்பூலத்தில் வைத்து ஹரி ஓம் என எழுதியதோடு, முதல் எழுத்தான அ என்பதை எழுதி குழந்தைகள் கல்வி கற்றலை தொடங்கினா்.
இதேபோல், திருநெல்வேலி நகரத்தில் உள்ள சரஸ்வதி கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சியிலும் ஏராளமான குழந்தைகள் பங்கேற்று கல்வி கற்றலை தொடங்கினா்.
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பாளையங்கோட்டை ஜெயேந்திரா மெட்ரிக் பள்ளி, பெருமாள்புரம் லலிதா வித்யாஷ்ரம், வி.எம். சத்திரம் ஜெயேந்திரா சுவாமிகள் வித்யா கேந்திரா பள்ளிகளில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சிகளில் ஜெயேந்திரா பள்ளி கல்விக் குழுமங்களின் இயக்குநா் ஜெயேந்திரன் மணி, பள்ளி முதல்வா்ஜெயந்தி ஜெயேந்திரன் ஆகியோா் பங்கேற்றனா். திருநெல்வேலி நகரம் லிட்டில் பிளவா் மாடல் பள்ளி, காந்திநகா் லிட்டில் பிளவா் சிபிஎஸ்இ பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.