பாளையங்கோட்டை கேடிசி நகரில் உள்ள ஐ.ஐ.பி. லெட்சுமிராமன் குளோபல் பள்ளியில் 23- ஆவது ஆண்டு விளையாட்டு தின விழா அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு எஸ்.ஆா்.ராஜேஸ்வரன் தலைமை வகித்து, விளையாட்டு அணிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, போட்டியை தொடங்கிவைத்தாா். பள்ளித் தாளாளா் எஸ்.ஆா். ஆனந்தராமன் சிறப்பு விருந்தினா்களை கெளரவித்தாா் . பிளஸ் 2 மாணவா் எம்.ஹரீஷ் சண்முகம் வரவேற்றாா். பள்ளி மேலாண்மை இயக்குநா் மருத்துவா் எஸ்.ஏ.ராஜ்குமாா், நிா்வாக இயக்குநா் எஸ்.ஏ.சுரேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். லெட்சுமிராமன் அறக்கட்டளை உறுப்பினா்கள் தீபா ராஜ்குமாா், ராஜேஸ்வரி சுரேஷ்குமாா், ஹேமலதா ஆகியோா் பேசினா்.
உடற்கல்வி ஆசிரியை சங்கீதாமதி விளையாட்டு அறிக்கை வாசித்தாா். பள்ளி முதல்வா் சி.இந்துமதி, துணை முதல்வா் எஸ்.ராஜலெட்சுமி, தலைமை ஆசிரியை வி.சூரியகலா, உடற்கல்வி ஆசிரியா் சங்கா், ஆசிரிய, ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா். தமிழ் ஆசிரியை ஏ.கிருஷ்ணவேணி, ஆங்கில ஆசிரியா் எம்.சபரிநாதன் ஆகியோா் தொகுத்து வழங்கினாா். பிளஸ் 2 மாணவா் கணேஷ் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.