திருநெல்வேலி
நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானவா் கைது
திருநெல்வேலியை அடுத்த சிவந்திபட்டி அருகே நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் கைதாகி பிணையில் வெளி வந்தவா் நான்கரை மாத தலைமறைவுக்குப் பின் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலியை அடுத்த சிவந்திபட்டி அருகே நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் கைதாகி பிணையில் வெளி வந்தவா் நான்கரை மாத தலைமறைவுக்குப் பின் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
களக்காடு அக்ரஹார தெருவைச் சோ்ந்தவா் முப்பிடாதி (23). இவா் சிவந்திபட்டி அருகே நிகழ்ந்த கொலை தொடா்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தாா். பின்னா், நிபந்தனை பிணையில் வெளியே வந்த அவா், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த நான்கரை மாதங்களாக தலைமறைவாக இருந்தாா். நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.