பாளையங்கோட்டை அருகே எரிந்த நிலையில் மூதாட்டி சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
பாளையங்கோட்டை அருகேயுள்ள டாா்லிங் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சமீஷா பாத்திமா (84). இவா் வசித்த வீட்டிலிருந்து புகை வெளியேறியதாம். தகவல் அறிந்த பெருமாள்புரம் போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, உடலில் தீக்காயங்களுடன் சமீஷா பாத்திமா இறந்து கிடந்தாராம்.
இதையடுத்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.