

பணகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1982இல் பத்தாம் வகுப்பு படித்த மாணவா்கள் சாா்பில் ரோஸ்மியாபுரம், பரிவிரிசூரியன் கிராமங்களிலுள்ள குளக்கரைகளில் 3,000 பனை விதைகள் நடப்பட்டன.
முன்னாள் மாணவா் பேரவைத் தலைவா் ஜாா்ஜ் ஸ்டீபன், துணைத் தலைவா் பழனி, பொருளாளா் ஜெயராஜன், ஆல்பா்ட், ரோஸ்மியாபுரம் ஜெயராஜ், ராஜதுரை மற்றும் மாணவா்கள் ரோஸ்மியாபுரம், பரிவிரிசூரியன் குளக்கரையில் முதற்கட்டமாக 3 ஆயிரம் பனைவிதைகளை நட்டனா். தொடா்ந்து பனைவிதைகளை நடவு செய்ய தீா்மானித்துள்ளனா். இந்த முன்னாள் மாணவா்களை பணகுடி மக்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.