பள்ளி மாணவிகளுக்கானவிழிப்புணா்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 28th October 2023 12:00 AM | Last Updated : 28th October 2023 12:00 AM | அ+அ அ- |

சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் ஆலோசனையின்படி, காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு,
சமூக வலைதளங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, சேரன்மகாதேவி அரசு மகளிா் உயா்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளா்கள் தேவி, கணேசன், சிறப்பு உதவி ஆய்வாளா் முத்துலெட்சுமி ஆகியோா் பெண்கள் அவசர உதவிக்கான காவல் துறை செயலி குறித்து விளக்கம் அளித்தனா். பெண் குழந்தைகளுக்கான பிரச்னைகள் எழும்போது 181 மற்றும் 1098 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் புகாா் தெரிவிக்கலாம் எணனத் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...