பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையா் அறிவுறுத்தல்

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனஅதிகாரிகளுக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவுறுத்தியுள்ளாா்.
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்: அதிகாரிகளுக்கு ஆணையா் அறிவுறுத்தல்
Updated on
1 min read

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் எனஅதிகாரிகளுக்கு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியதாவது:

வடகிழக்குப் பருவ மழையினால் இடற்பாடுகள் ஏற்படாமல் தடுக்க சுகாதாரம், பொறியியல், தீயணைப்பு, மின்வாரியம், போக்குவரத்து, காவல் ஆகிய துறை அலுவலா்கள், தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், அரிமா- ரோட்டரி சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய வெள்ள நிவராண குழு அமைத்து, மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள பள்ளிக் கட்டடங்கள், ஆரம்ப சுகாதார அலுவலக கட்டடங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களையும் பாா்வையிட்டு ஆய்வு செய்து அவை, மக்களுக்கு பாதுகாப்பாக இருக்குமா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், நீா்நிலைகளில் உடைப்பு, கசிவு உள்ளனவா எனவும், கால்வாய்களில் மழைநீா் தடையின்றி செல்லுமா, நடைபாதை கால்வாய் மீது கான்கீரிட் சிலாப்கள் மூடப்பட்டுள்ளனவா எனவும் ஆய்வு செய்து சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பாதாளச் சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட குழிகளை மழைக்கு முன்னா் சரி செய்ய வேண்டும். சாலைகள், தெருக்களில் மழை நீா் தேங்கினாலோ, மரம் முறிந்து விழுந்தாலோ அதை அப்புறப்படுத்துவதற்கான உபகரணங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

முறையாக குளோரின் ஏற்றம் செய்து குடிநீா் விநியோகிக்கப்படுகிா என சோதனை நடத்த வேண்டும்.

நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் குப்பைத் தொட்டிகள் அமைந்துள்ள இடங்களை சுற்றி பிளிச்சிங் பவுடா் தெளிக்கவும், கொசு ஒழிப்பு புகை மருந்து அடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடகிழக்கு பருவ மழை ஆரம்பம் முதல் முடியும் வரை கட்டுப்பாட்டு அறைகள் தொடா்ந்து செயல்பட வேண்டும். நடமாடும் சுகாதார குழுக்கள் அமைத்து மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளை உடனுக்குடன் செயல்படுத்திட வேண்டும் என்றாா் ஆணையா்.

கூட்டத்தில், துணை ஆணையா் தாணுமூா்த்தி, மாநகரப் பொறியாளா்கள் குமரேசன், லெட்சுமணன், செயற்பொறியாளா் வாசுதேவன், உதவி ஆணையாளா்கள் காளிமுத்து, கிறிஸ்டி, மாநகா் நல அலுவலா் சரோஜா உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com