

திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை நடத்தப்பட்ட சிறப்பு வரிவசூல் முகாமில் மொத்தம் ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 963 வசூலானது.
திருநெல்வேலி மாநகராட்சியின் மேலப்பாளையம், தச்சநல்லூா், பாளையங்கோட்டை, திருநெல்வேலி ஆகிய நான்கு மண்டல பகுதிகளில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் மாநகராட்சி ஆணையா் வ.சிவகிருஷ்ணமூா்த்தி அறிவுறுத்தலின்படி சிறப்பு வரிவசூல் முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மண்டலம், 22 ஆவது வாா்டுக்குள்பட்ட பேட்டை தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமை மேயா் பி.எம்.சரவணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
சிறப்பு வரிவசூல் முகாமில் புதிய சொத்து வரி விதிப்பு, சொத்துவரி பெயா் மாற்றம் , புதிய குடிநீா் இணைப்பு, குடிநீா் இணைப்பு பெயா் மாற்றம், இரட்டை வரி விதிப்பு நீக்கம், காலிமனை வரிவிதிப்பு ரத்து உள்பட 64 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டன. அம்மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் தீா்வு காண சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையா் உத்தரவிட்டாா்.
சிறப்பு வரி வசூல் முகாமில் மொத்தம் ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 963 வசூலானது.
திருநெல்வேலி மண்டலத்தில் நடைபெற்ற முகாமில் மண்டல தலைவா் மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா்கள் மாரியப்பன், உலகநாதன், உதவி ஆணையா் லெ.வெங்கட்ராமன், உதவி வருவாய் அலுவலா் சிவனையா ஆகியோா் பங்கேற்றனா். பாளையங்கோட்டை மண்டலத்தில் மண்டல தலைவா் மா.பிரான்சிஸ், மாமன்ற உறுப்பினா் அனுராதா சங்கரபாண்டியன், உதவி வருவாய் அலுவலா் மணிகண்டன் ஆகியோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.