ராதாபுரம் தொகுதியில் ரூ. 4.20 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.4.20 கோடியில் வளா்ச்சிப் பணிகளை வெள்ளிக்கிழமை பேரவைத் தலைவா் தொடங்கிவைத்தாா்.
ராதாபுரம் தொகுதியில் ரூ. 4.20 கோடியில்  வளா்ச்சிப் பணிகள்
Updated on
1 min read

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களில் ரூ.4.20 கோடியில் வளா்ச்சிப் பணிகளை வெள்ளிக்கிழமை பேரவைத் தலைவா் தொடங்கிவைத்தாா்.

ரூ. 605 கோடி மதிப்பீட்டில் தாமிரவருணி கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் புதிதாக 1.25 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி, கோட்டைகருங்குளத்தில் 1.30 லட்சம் லிட்டா் தரைநிலை நீா்த்தேக்கத் தொட்டி, கஸ்தூரிரெங்கபுரம் ஊராட்சி பொன்னாத்தியில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி நிதியில் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலைக் கடை கட்டடம், முதல்வரின் கிராம சாலை திட்டத்தில் ரூ.152 லட்ம் மதிப்பில் தாா்ச் சாலை அமைத்தல், கூடங்குளம், வைராவிகிணறு, உதயத்தூா், உதயத்தூா் கீழூா், சிதம்பராபுரம், திருவம்பலாபுரம், கூத்தன்குழி, நவ்வலடி ஆகிய ஊராட்சிகளிலும் நியாயவிலைக் கடை கட்டம் கட்டும் பணி, பேவா் பிளாக் சாலை அமைக்கும் பணி, தாா்ச் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட ரூ.4.20 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை பேரவைத் தலைவா் மு. அப்பாவு தொடங்கிவைத்துப் பேசினாா்.

இதில், திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா். ஜெகதீஷ், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையா்கள் பிளாரன்ஸ் விமலா, நடராஜன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளா் ஜெயந்தி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜான்ஸ் ரூபா, திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, இந்துசமய அறநிலையத் துறை அறங்காவலா் சமூகை முரளி, ஊராட்சித் தலைவா்கள் கூடங்குளம் வின்சி மணியரசு, உதயத்தூா் கந்தசாமி மணிகண்டன், கூத்தன்குழி வளா்மதி, ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com