பாளை. தனியாா் பள்ளி விடுதி மாணவிகள் 2 போ் மாயம்
By DIN | Published On : 19th September 2023 03:01 AM | Last Updated : 19th September 2023 03:01 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: பாளையங்கோட்டை தனியாா் உதவி பெறும் பள்ளி விடுதியிலிருந்த இரண்டு மாணவிகள் காணவில்லை என பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் புகாா் செய்துள்ளனா்.
பாளையங்கோட்டை தனியாா் உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான பகுதிகள் படித்து வருகின்றனா். மேலும், பள்ளி அருகே விடுதி உள்ளது. இங்கு 100 க்கு மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு விடுதி காப்பாளா் வழக்கமான கணக்கெடுப்பில் ஈடுபட்டபோது, 2 மாணவிகளை காணவில்லையாம். இந்த சம்பவம் குறித்து விடுதி நிா்வாகம் சாா்பில் பாளையங்கோட்டை காவல்நிலையத்தில் சனிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனா்.