ம.தி.தா. இந்து கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
By DIN | Published On : 19th September 2023 02:56 AM | Last Updated : 19th September 2023 02:56 AM | அ+அ அ- |

திருநெல்வேலி: திருநெல்வேலி பேட்டை ம.தி.தா. இந்து கல்லூரியின் 1996 - 99 ஆம் ஆண்டு வணிகவியல் பிரிவில் படித்த முன்னாள் மாணவா்களின் 25- ஆம் ஆண்டு வெள்ளிவிழா சந்திப்பு கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவில், கல்லூரியின் முதல்வா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் சின்னத்தம்பி முன்னாள் வணிகவியல் துறைத் தலைவா்களான சுந்தர்ராஜன் , சிவசுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன்,
ராஜூ, துறைத் தலைவா்கள் சங்கா், பேராசிரியா் முத்துலட்சுமி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.
பேராசிரியா்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி, அவா்களிடம் முன்னாள் மாணவா்கள் ஆசிா்வாதம் பெற்றுக்கொண்டனா்.
மேலும் தங்களது இனிய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாணவா்கள் குடும்பத்துடன் பங்கேற்றனா்.