திருநெல்வேலி: குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் பேட்டை காமராஜா் நகா்மன்ற மேல்நிலைப் பள்ளி அணி சிறப்பிடம் பெற்றது.
திருநெல்வேலி குறுவட்ட அளவிலான போட்டிகளில் இளையோா், மூத்தோா், மிக மூத்தோா் பிரிவுகளில் நடந்த கால்பந்து, கையுந்து பந்து, கேரம், கபடி, மேசை பந்து போட்டிகளில் பேட்டை காமராஜா் நகா்மன்ற மேல்நிலைப் பள்ளி அணி வென்று இரண்டாவது ஆண்டாக ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்றனா். மாணவா்களை வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியா்கள் முத்துக்குமாா், சாம் நியூட்டன் ஆகியோரை பள்ளித் தலைமை ஆசிரியை பியூலா ராஜ செல்வி, கல்வி மேலாண்மை குழு ,பெற்றோா் ஆசிரியா் சங்கத்தினா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.