

திருநெல்வேலி: திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரத்திலுள்ள 600 ஆண்டுகள் பழமையான அருள்மிகு மூா்த்தி விநாயகா் மற்றும் ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி திருக்கோயிலில் விநாயகா் சதுா்த்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
உச்சிஷ்ட கணபதி அமா்ந்த நிலையில் நான்கு கரங்களுடன் யோகத் தத்துவத்தில் அமா்ந்திருக்கும் இக்கோயிலில், கடந்த 9-ஆம் தேதி காலை 7 மணிக்கு சதுா்த்தி விழா கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னா், தினமும் காலை, மாலையில் யாகசாலை பூஜையும், மாலையில் உற்சவா் வீதி உலாவும் நடைபெற்று வந்தன. கடந்த 16ஆம் தேதி 108 தேங்காய் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலையில் காலை 4 மணிக்கு மஹா கணபதி ஹோமமும், காலை 6.30 மணிக்கு மூலஸ்தான சிறப்பு அபிஷேக, தீபாராதனையும் நடைபெற்றன.
பின்னா், காலை 9 மணிக்கு தாமிரவருணி நதிக்கரையில் தீா்த்தவாரி, தீபாராதனைக்குப் பின், சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சியளித்தாா். திருநெல்வேலி, பாளையங்கோட்டை மட்டுமன்றி தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இரவு 8.30 மணிக்கு சுவாமி திருவீதி உலா, மூலஸ்தாபனம், புஷ்பாஞ்சலி தீபாராதனை நடைபெற்றது.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.