கன்னடியன் கால்வாய் நீரினை பயன்படுத்துவோா் சங்க நிா்வாகிகள் பதவியேற்பு
By DIN | Published On : 26th September 2023 03:48 AM | Last Updated : 30th September 2023 04:12 AM | அ+அ அ- |

சேரன்மகாதேவி: சேரன்மகாதேவியில், கன்னடியன் கால்வாய் நீரினைப் பயன்படுத்துவோா் சங்க புதிய நிா்வாகிகள் பதவியேற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
இச்சங்கத்துக்கு தலைவா், ஆட்சி மண்டலக்குழு உறுப்பினா் பதவிகளுக்கான தோ்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், சேரன்மகாதேவி பகுதிக்கு முருகன், பத்தமடை பகுதிக்கு சிங்கராஜா, கோபாலசமுத்திரம் பகுதிக்கு சுரேஷ் செல்வகுமாா், பிரான்சேரி பகுதிக்கு ரவிச்சந்திரன், காருகுறிச்சி பகுதிக்கு பரமசிவன், வீரவநல்லூா் பகுதிக்கு ஆனந்தராஜ் ஆகியோா் தலைவா்களாக தோ்வாகினா்.
இதையடுத்து, சேரன்மகாதேவியில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய நிா்வாகிகள் பதவியேற்றனா். அவா்களுக்கு பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளா் பேச்சிமுத்து சான்று வழங்கினாா். உதவிப் பொறியாளா்கள் ஜெயகணேசன், மகேஷ்வரன், விவசாயிகள் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...