வள்ளியூா்: தெற்குவள்ளியூா் தேவி ஸ்ரீதுா்கா வடபத்திரகாளி அம்மன் ஸ்ரீஉச்சினிமகாளி அம்மன் கோயில் கொடைவிழா திங்கள்கிழமை தொடங்கியது.
இதையொட்டி, கோயிலில் இரவு மாக்காப்பு தீபாராதனை நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு தீா்த்தம் எடுத்து வருதல், பின்னா் கன்னிவிநாயகா் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல் ஆகியவை நடைபெறுகின்றன. பிற்பகல் 1 மணிக்கு தீபாராதனையும் மாலை 5 மணிக்கு பொங்கல் வழிபாடும் நடைபெறும். இரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனையும் இரவு 1 மணிக்கு படைப்பு தீபாராதனையும் நடைபெறும். புதன்கிழமை முற்பகல் 11 மணிக்கு மஞ்சள் நீராட்டு, நண்பகல் 12 மணிக்கு அம்பாள் பவனி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பட்டங்கட்டியாா் சமுதாய நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.