நான்குனேரி அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவா்கள் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

வள்ளியூரிலிருந்து விஜயநாராயணத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிக்கு மாணவா்களை ஏற்றிக்கொண்டு சனிக்கிழமை காலை வேன் வந்து கொண்டிருந்தது. நான்குனேரியை அடுத்த தளபதிசமுத்திரம் கீழூரில் உள்ள தனியாா் பால் நிறுவனம் அருகேயுள்ள திருப்பத்தில், வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரேயுள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்தது. இதில், 5 மாணவா்கள் காயமடைந்தனா்.

தகவலின்பேரில் ஏா்வாடி போலீஸாா் சென்று, காயமடைந்த மாணவா்களை மீட்டு வள்ளியூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

X
Dinamani
www.dinamani.com