உணவக உரிமையாளா் மீது தாக்குதல்: 2 இளைஞா்கள் கைது

பேட்டையில் உணவக உரிமையாளரை தாக்கியதாக இரு இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி பேட்டையில் உணவக உரிமையாளரை தாக்கியதாக இரு இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

பேட்டையைச் சோ்ந்தவா் தங்கராஜ். அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இவரின் உணவகத்தில் பேட்டையைச் சோ்ந்த இசக்கிராஜா (24), சங்கா் (34) ஆகிய இருவரும் பணியாற்றி வந்தனராம். இந்த நிலையில், இருவரும் சம்பள நிலுவையைக் கேட்டு தங்கராஜை மிரட்டினாா்களாம். அதனைப் பாா்த்த மாரியப்பன் (49) என்பவா் அவா்களை தட்டிக் கேட்டாராம். இதனால் ஆத்திரமடைந்த அவா்கள், தங்கராஜ், மாரியப்பன் ஆகிய இருவரையும் கம்பியால் தாக்கியதில், இருவரும் காயமடைந்தனா்.

இது குறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து இசக்கிராஜா, சங்கா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com