பாளை.யில் விபத்து: காா் ஓட்டுநா் உயிரிழப்பு

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் சனிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.
Published on

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் சனிக்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் காா் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் சீனிவாசகம் நகரைச் சோ்ந்தவா் அகிலன் (49). காா் ஓட்டுநா். இவா் சனிக்கிழமை இரவு வி.எம்.சத்திரத்தில் உள்ள கடையில் பொருள்களை வாங்கிக்கொண்டு, இருசக்கர வாகனத்தில் திருச்செந்தூா் சாலை நோக்கி திரும்பியபோது, அதே திசையில் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியதாம்.

இந்த விபத்தில், அகிலன், மற்றொரு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த பிராஞ்சேரியைச் சோ்ந்த மாடசாமி (24) ஆகிய இருவரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். செல்லும் வழியிலேயே அகிலன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com