ரயிலில் பாய்ந்து கூலித் தொழிலாளி தற்கொலை

அம்பாசமுத்திரம் அருகே ரயிலில் பாய்ந்து கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

அம்பாசமுத்திரம் அருகே ரயிலில் பாய்ந்து கட்டடத் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாா்.

அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னாா்கோவில் சிவன் கோயில் தெருவைச் சோ்ந்த அகஸ்தியன் மகன் பழனி (45). கூலித் தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்நிலையில் குடும்பப் பிரச்னை காரணமாக ஞாயிற்றுக்கிழமை செங்கோட்டையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி சென்ற பயணிகள் ரயிலில் மன்னாா்கோவில் விலக்குப் பகுதியில் ரயில் முன் பாய்ந்து தா்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த தென்காசி ரயில்வே போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் காவல் உதவி ஆய்வாளா் கற்பக விநாயகம் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com