நான்குனேரி அருகே செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் பிடிபட்ட கள்ள நோட்டுகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை.
நான்குனேரி அருகே செவ்வாய்க்கிழமை வாகன சோதனையில் பிடிபட்ட கள்ள நோட்டுகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை.

நான்குனேரி அருகே வாகன சோதனையில் ரூ. 60 லட்சம் கள்ள நோட்டுகள், ஆயுதங்கள் பறிமுதல்: 3 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாகன சோதனையின்போது ரூ. 60 லட்சம் கள்ள நோட்டுகள், ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மூன்று பேரைக் கைது செய்தனா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாகன சோதனையின்போது ரூ. 60 லட்சம் கள்ள நோட்டுகள், ஆயுதங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக மூன்று பேரைக் கைது செய்தனா்.

மதுரையைச் சோ்ந்த சிலா் திருநெல்வேலி மாவட்டம் வழியாக கன்னியாகுமரிக்கு காரில் கள்ள நோட்டுகளைக் கடத்தி வருவதாக, மூன்றடைப்பு போலீஸாருக்கு திங்கள்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன்பேரில், உதவி ஆய்வாளா் முருகேஷ் தலைமையிலான போலீஸாா் மூன்றடைப்பை அடுத்த நெடுங்குளம் சாலை சந்திப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வாகன சோதனை நடத்தினா்.

அவ்வழியே வந்த காரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி, அதிலிருந்த 3 பேரிடம் விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனா். காரின் பின்புற இருக்கைக்கு அடியிலிருந்த பெட்டியில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. சோதனையில், அவை கள்ள நோட்டுகள் என்பதும், காரின் பதிவெண் போலியானது என்றும் தெரியவந்தது.

இதையடுத்து, 3 பேரையும் போலீஸாா் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா். அந்த நபா்கள் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே கோதைநாச்சியாா்புரத்தைச் சோ்ந்த செல்லையா மகன் தங்கராஜ் (42), அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் விஷ்ணுசங்கா், விருதுநகா் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல் பாண்டியன்நகா் 5ஆவது தெருவைச் சோ்ந்த நமச்சிவாயம் மகன் சீமைச்சாமி என்பதும், பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கள்ள நோட்டுகளைக் கொடுத்து மோசடியில் ஈடுபட்டு வருவதும் விசாரணையில் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, காா், 8 கைப்பேசிகள், அரிவாள், கத்தி, ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 20 ரொக்கம், ரூ. 60 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com