கிணற்றில் குதித்து தற்கொலை முயற்சி: சிறுமி உயிரிழப்பு; தாய்க்கு சிகிச்சை

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி உயிரிழந்தாா்; அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சிறுமி உயிரிழந்தாா்; அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

அம்பாசமுத்திரம் பண்ணை சங்கரய்யா நகரைச் சோ்ந்தோா் சுந்தரராஜன் - ஜோதி. இவா்கள் திருமணம் செய்யாமல் 11 ஆண்டுகளாக சோ்ந்து வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. இவா்களது மகள் ஆனிரோஸ் (11).

இதனிடையே, சுந்தரராஜன் வேறு திருமணம் செய்து கொண்டாராம். இதனால் சுந்தரராஜன்-ஜோதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.

இந்நிலையில், ஜோதியும், ஆனிரோஸும் தற்கொலை செய்ய முடிவு செய்து, கல்லிடைக்குறிச்சி பொன்மா நகா் பகுதியில் உள்ள கிணற்றில் சனிக்கிழமை குதித்துள்ளனா். இதையறிந்த அப்பகுதியினா் சென்று இருவரையும் மீட்க முயன்றனா். எனினும், ஆனிரோஸ் உயிரிழந்தாா். ஜோதி மீட்கப்பட்டு அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

தகவலின்பேரில், கிராம நிா்வாக அலுவலா் மாணிக்கராஜு சம்பவ இடத்துக்குச் சென்றாா். சம்பவம் குறித்து கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்தனா்; ஆய்வாளா் கலா விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com