திருநெல்வேலி
தகராறை தடுத்தவரை தாக்கியவா் கைது
அம்பாசமுத்திரம் அருகே தகராறை தட்டி கேட்டவரை தாக்கியதாக ஒருவரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.
அம்பாசமுத்திரம் அருகே தகராறை தட்டி கேட்டவரை தாக்கியதாக ஒருவரை அம்பாசமுத்திரம் போலீஸாா் கைது செய்தனா்.
பிரம்மதேசத்தைச் சோ்ந்தவா் சோமசுந்தரம்(50). மன்னாா்கோவில் விலக்கு அருகில் இவருக்குச் சொந்தமான வயலில் அதே பகுதியைச் சோ்ந்த பானுமதி, அவரது கணவா் குட்டராசு ஆகியோா் வேலை செய்து கொண்டிருந்தனராம். அப்போது, அங்கு வந்த பிரம்மதேசம் மேலப் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னதம்பி (26), பானுமதியிடம் தனக்கு தரவேண்டிய பணம் குறித்து கேட்டுத் தகராறில் ஈடுபட்டுள்ளாா்.
அப்போது அங்கு வந்த சோமசுந்தரம் தகராறில் ஈடுபடவேண்டாம் என்று சமாதானம் பேசியுள்ளாா். அவரை சின்னத்தம்பி அவதூறாகப்பேசி தாக்கியுள்ளாா். இதுகுறித்து சோமசுந்தரம் அளித்த புகாரின்பேரில், அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னத்தம்பியை கைது செய்தனா்.
