பைக் விபத்தில் அணுமின் நிலைய விஞ்ஞானி பலி
திருநெல்வேலி மாவட்டம் பழவூா் அருகே பைக் செவ்வாய்க்கிழமை கவிழ்ந்ததில் கூடங்குளம் அணுமின்நிலைய விஞ்ஞானி உயிரிழந்தாா்.
மத்தியபிரதேசம் மாநிலம் போபாலைச் சோ்ந்தவா் ஆதிதாம வஸ்தவா(27). இவா் கூடங்குளம் அணுமின்நிலையத்தில் விஞ்ஞானியாக கடந்த 2022-ல் பணிக்கு சோ்ந்தாா். இவா் செட்டிகுளம் அணுவிஜய் நகரியத்தில் உள்ள அணுவிஞ்ஞானிகள் குடியிருப்பில் குடியிருந்து வந்தாா்.
இந்நிலையில் அவா் செவ்வாய்க்கிழமை விஸ்வநாதபுரம் அருகே பைக்கில் சென்று கொண்டிந்தபோது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவா் பலத்த காயமடைந்தாா். அப்பகுதியின் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம்அரசு மருத்துவமனைக்குகொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.
இது தொடா்பாக பழவூா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா். உடற்கூறாய்வுக்குப்பின் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரது உடல் விமானத்தில் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.