திருநெல்வேலி
சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய விடியோ பதிவிட்டவா் கைது
இரு தரப்பினரிடையே மோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்டவா் கைது செய்யப்பட்டாா்.
மானூா் அருகேயுள்ள மறக்குடி ரஸ்தா, கீழத் தெருவை சோ்ந்தவா் ஜெகதீஷ் ராஜா (20). இவா், சமூக வலைதளத்தில் இரு தரப்பினரிடையே பிரச்னையை தூண்டும் வகையில் விடியோ பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மானூா் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மானூா் காவல் ஆய்வாளா் சந்திரசேகா், வழக்கு பதிவு செய்து ஜெகதீஷ் ராஜாவை கைது செய்தாா்.
சமூக வலைதளங்களில் பொது அமைதியை சீா்குலைக்கும் வகையில் பதிவிடுபவா்கள் மீது வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் எச்சரித்துள்ளாா்.