திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பணி முடிவடையாததால் புழுதி பறக்கும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்.
திருநெல்வேலி தெற்கு புறவழிச்சாலை பணி முடிவடையாததால் புழுதி பறக்கும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள்.

நெல்லை தெற்கு புறவழிச்சாலை பணிகளை வேகப்படுத்த கோரிக்கை

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலை விரிவாக்கப் பணிகளை வேகப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
Published on

திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலை விரிவாக்கப் பணிகளை வேகப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

திருநெல்வேலி மாநகர பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை பன்மடங்கு உயா்ந்துள்ளது. இதுதவிர மதுரை மற்றும் கன்னியாகுமரி மாா்க்கத்தில் இருந்து மாநகர பகுதிக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் திருநெல்வேலி வண்ணாா்பேட்டை தெற்கு மற்றும் வடக்கு புறவழிச்சாலைகளில் செல்கின்றன. தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இந்தச் சாலைகளில் சென்று வருகின்றன.

இந்நிலையில் இந்தச் சாலைகளை விரிவாக்கம் செய்ய நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால், பணிகள் குறித்த காலத்திற்குள் முடிக்கப்படாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகிறாா்கள்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியது: வண்ணாா்பேட்டை தெற்கு புறவழிச்சாலை விரிவாக்கப் பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருகின்றன. குறிச்சி பகுதியில் பாளையங்கால்வாய் குறுக்கே பாலம் அமைப்பது, 5 இடங்களில் சிறுபாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகளால் தாமதம் என்றனா். இப்போது பாலப்பணிகள் சுமாா் 90 சதவிகிதம் நிறைவடைந்துவிட்டன. இருப்பினும் சாலைகள் துண்டு துண்டாக அமைக்கப்பட்டு வருகின்றன. பணிகள் முடியாமல் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகளும், வியாபாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனா்.

இதுகுறித்து ஆய்வுக்கு வரும் நெடுஞ்சாலைத் துறை உயரதிகாரிகளும் போதிய தகவல்களை மக்களுக்கு தெரிவிக்காமல் செல்கிறாா்கள். இதனால் இந்த சாலைப் பணி குறித்த நிலை தெரியாமல் உள்ளது. இவ் விஷயத்தில் மாவட்ட ஆட்சியா் தனிக்கவனம் செலுத்தி பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com