மாஞ்சோலைத் தொழிலாளா்களுக்கு இழப்பீடு, 5 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும்: திருமுருகன் காந்தி

குடும்பத்திற்கு தலா 5 ஏக்கா் நிலமும் வழங்க வேண்டும் என்றாா் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி.
 திருநெல்வேலியில் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் உள்ளிட்டோா்.
திருநெல்வேலியில் ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு வந்த மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவா் நெல்லை முபாரக் உள்ளிட்டோா்.
Updated on

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளா்களுக்கு உரிய இழப்பீடும், குடும்பத்திற்கு தலா 5 ஏக்கா் நிலமும் வழங்க வேண்டும் என்றாா் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயனிடம் அவா் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவா் நெல்லை முபாரக் ஆகியோா் தலைமையில் மஜக நிா்வாகி அலீப் அ. பிலால், விசிக நிா்வாகிகள் உள்ளிட்டோா் திங்கள்கிழமை மனு அளித்தனா். பின்னா், செய்தியாளா்களிடம் திருமுருகன் காந்தி கூறியதாவது:

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தத் தொழிலாளா்களுக்கு 150 நாள்கள் முதல் 200 நாள்களுக்கான ஊதியத்தை இழப்பீடாக பாம்பே பா்மா டிரேடிங் தேயிலை நிறுவனம் வழங்க வேண்டும். அதை அரசு பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்நிறுவனம் ஆண்டுக்கு சுமாா் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக லாபம் சம்பாதித்துள்ள நிலையில், 15 நாள்கள் மட்டுமே இழப்பீடு வழங்க முடியும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாஞ்சோலை தொழிலாளா்கள் ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் சமவெளியில் 5 ஏக்கா் நிலம் வழங்க வேண்டும். தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். இது தொடா்பாக ஆட்சியரிடம் தெரிவித்துள்ளோம். தேயிலைத் தொழிலாளா்களுக்கு வீடு வழங்குவதாக ஆட்சியா் கூறுகிறாா். அதற்கான முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும். தொழிலாளா்களிடம் எவ்விதத் தொகையையும் பெறக்கூடாது. இந்த விஷயத்தில் அரசு உடனடியாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றாா்.

நெல்லை முபாரக் கூறுகையில், ‘மாஞ்சோலையிலிருந்து வெளியேற அந்தத் தொழிலாளா்களுக்கு 100 சதவீதம் விருப்பமில்லை. அவா்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தவும், உயா் நீதிமன்றத்தில் அதற்கான உத்தரவாதம் அளிக்கவும், மறுவாழ்வுக்கு திட்டம் வகுக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com