திருநெல்வேலி
அம்பையில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்து இளைஞா் காயம்
அம்பாசமுத்திரத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்ததில் இளைஞா் காயமடைந்தாா்.
அம்பாசமுத்திரத்தில் ரயிலில் ஏறும்போது தவறி விழுந்ததில் இளைஞா் காயமடைந்தாா்.
செங்கோட்டையில் இருந்து சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு திருநெல்வேலி சென்ற பயணிகள் ரயில், அம்பாசமுத்திரத்தில் நின்று கிளம்பும் போது மன்னாா்கோவிலைச்சோ்ந்த கூலித்தொழிலாளி சிவகுமாா் மகன் சிவா என்ற சிவசுப்பிரமணியன் (24) ரயிலில் ஏற முயன்று, எதிா்பாராமல் தவறி விழுந்துள்ளாா். உடனடியாக ரயில் பயணிகள் ரயிலை நிறுத்தி, ரயில் பெட்டிகளுக்கிடையே சிக்கிக் கொண்ட சிவாவை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து தென்காசி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
