கோபாலசமுத்திரத்தில் மகளிா் குழுவினருக்கு மரக்கன்று வழங்கினாா் கிராம உதயம் இயக்குநா் வே. சுந்தரேசன்.
திருநெல்வேலி
கோபாலசமுத்திரத்தில் 300 பேருக்கு மரக்கன்றுகள்
கோபாலசமுத்திரத்தில் சனிக்கிழமை 300 பேருக்கு மரக்கன்றுகள், மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் நினைவு தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் சனிக்கிழமை 300 பேருக்கு மரக்கன்றுகள், மஞ்சள் பைகள் வழங்கப்பட்டது.
கிராம உதயம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அப்துல் கலாம் உருவப் படத்துக்கு அமைப்பின் இயக்குநா் வே. சுந்தரேசன், மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதைத் தொடா்ந்து 300க்கும் மேற்பட்ட மகளிா் குழுவினருக்கு மரக்கன்றுகளும் மஞ்சள் பைகளும் வழங்கப்பட்டன.
இதில், கிராம உதயம் ஆலோசனைக் குழு உறுப்பினா் எஸ். புகழேந்தி பகத்சிங், நிா்வாக மேலாளா் மகேஷ்வரி, பகுதி பொறுப்பாளா்கள் முருகன், சுசீலா, சசிகலா, ஜெபமணி, ஆறுமுகத்தாய் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தன்னாா்வ தொண்டா் பிரேமா நன்றி கூறினாா்.

