களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளம் திருவள்ளுவா் படிப்பகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
திருநெல்வேலி
படிப்பகத்தில் அப்துல்கலாம் நினைவு நாள் அனுசரிப்பு
சவளைக்காரன்குளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
களக்காடு அருகேயுள்ள சவளைக்காரன்குளத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல்கலாம் நினைவு நாள் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
சவளைக்காரன்குளம் திருவள்ளுவா் படிப்பகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், படிப்பக நிறுவனா் இ. நம்பிராஜன், அப்துல்கலாம் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினாா். கோவிலம்மாள்புரம் ஊராட்சி செயலா் கணேசன், சுகாதார ஊக்குவிப்பாளா் ஷீலா உதயபாரதி, ஊராட்சி களப்பணியாளா் மகாலட்சுமி, ஊா் தலைவா் மதியழகன், படிப்பக புரவலா் ராகினி பாலசோ்மன், படிப்பக மேற்பாா்வையாளா் மகாலட்சுமி மற்றும் மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா்.

