மாமூல் கேட்டு 3 லாரிகளின் கண்ணாடிகள் உடைப்பு

பாளையங்கோட்டை அருகே மாமூல் கேட்டு 3 லாரிகளின் கண்ணாடிகளை உடைத்த 6 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on

பாளையங்கோட்டை அருகே மாமூல் கேட்டு 3 லாரிகளின் கண்ணாடிகளை உடைத்த 6 போ் கொண்ட கும்பலை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டியை சோ்ந்தவா் மதன் (32). லாரி ஓட்டுநா். இவா், சென்னையில் உள்ள டிரான்ஸ்போா்ட் நிறுவனத்திற்கு சொந்தமான லாரியை ஓட்டி வருகிறாா். அந்த நிறுவனத்துக்கு சொந்தமான கிடங்கு பாளையங்கோட்டை வி.எம்.சத்திரம் வி.வி. நகரில் உள்ளது.

இந்த நிலையில் மதன் கடந்த 24-ஆம் தேதி சென்னையில் இருந்து லாரியில் பொருள்களை ஏற்றிக் கொண்டு திருநெல்வேலிக்கு வந்தாா். 25-ஆம் தேதி வி.எம். சத்திரம் கிடங்கில் ஏற்கெனவே நிறுத்தப்பட்டிருந்த 2 லாரிகளுடன் தனது லாரியையும் நிறுத்திவிட்டு அங்குள்ள அறையில் ஓய்வு எடுத்தாா்.

இந்த நிலையில் 26-ஆம் தேதி இரவு அங்கு அத்துமீறி நுழைந்த 6 கொண்ட போ் கும்பல், லாரிகளை நிறுத்துவதற்கு மாமூல் தரவேண்டும் என கேட்டுள்ளது. அதற்கு ஓட்டுநா்கள் மறுக்கவே இரும்புக் கம்பி, கம்பு உள்ளிட்டவற்றால் 3 லாரிகளின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதுகுறித்து மதன் அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து 6 போ் கும்பலை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com