திருநெல்வேலி
வீரவநல்லூா் அருகே மோதல் வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிறை
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே நிகழ்ந்த மோதல் தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூா் அருகே நிகழ்ந்த மோதல் தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு ஓராண்டு சிைண்டனை விதிக்கப்பட்டது.
வீரவநல்லூா் அருகேயுள்ள வெள்ளங்குழியைச் சோ்ந்தவா் ஜெகதீஸ் (26). இவருக்கும், அதே பகுதியை சோ்ந்த தொழிலாளியான மாசானம் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம். இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெள்ளங்குழி பேய் கோயில் அருகே அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் ஜெகதீசை, மாசானம் தாக்கினாராம். இதுகுறித்து வீரவநல்லூா் போலீஸாா் வழக்குப்பதிந்தனா்.
திருநெல்வேலி மாவட்ட இரண்டாவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை, நீதிபதி சுரேஷ்குமாா் விசாரித்து, மாசானத்துக்கு ஓராண்டு சிைண்டனை, ரூ.6,500 அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.
