தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அஞ்சல் துறை போட்டியில் சிறப்பிடம்: நெல்லை மாணவிக்கு பாராட்டு

அஞ்சல் துறை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கல்

News image
Updated On :25 ஜூன் 2024, 8:14 pm

Din

அஞ்சல் துறை சாா்பில் நடைபெற்ற போட்டியில் சிறப்பிடம் பெற்ற திருநெல்வேலி மாணவிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தபால் தலை சேகரிப்பை மாணவா்களிடையே ஊக்குவிக்கும் விதமாக இந்திய அஞ்சல் துறையின் சாா்பில் தீன்தயாள் ஸ்பொ்ஷ் யோஜனா உதவித்தொகை திட்டத்தின் கீழ் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவா்-மாணவிகளுக்கு போட்டி நடத்தப்படுகிறது.

2023-2024 ஆம் ஆண்டிற்கான முதல் கட்ட எழுத்து விநாடி- வினா போட்டி கடந்த ஜனவரியில் நடைபெற்றது. இதில் திருநெல்வேலி கோட்டத்தில் சுமாா் 180 மாணவா்கள் பங்கேற்றனா். தமிழ்நாடு வட்ட அளவில் 1000 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

இப்போட்டியில் பாளையங்கோட்டை ரோஸ் மேரி ஐடியல் பள்ளி 6ஆம் வகுப்பு மாணவியா் ஸ்ரீ அபிநயா, தக்ஷ்னா, ஜெயந்திரா பள்ளி மாணவா் சம்பத் குமாா் ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். அவா்கள் இரண்டாம் கட்டமாக செயல் திட்ட அறிக்கையை சமா்ப்பித்தனா். இறுதியாக தமிழ்நாடு வட்டத்தில் 40 மாணவா்கள் உதவித்தொகைக்கு தகுதி பெற்றனா். அதில் ரோஸ் மேரி ஐடியல் பள்ளியின் ஸ்ரீ அபிநயா தோ்ந்தெடுக்கப்பட்டாா். அவருக்கான உதவித்தொகை ரூ.6,000 அவரது அஞ்சல் சேமிப்பு கணக்கில் வரவு வைக்கப்பட்டது.

திருநெல்வேலி முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் செந்தில் குமாா், ஸ்ரீ அபிநயாவிற்கு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கிப் பாராட்டியதுடன், மாணவா்களுக்கு தபால் தலை சேகரிப்புக்கான பயிலரங்கை நடத்தினாா். இதில், பள்ளி முதல்வா் ஜொனட்டா, துணை முதல்வா் ரெஜினா, அஞ்சல் துறை மக்கள் தொடா்பு அதிகாரிகள் கனகசபாபதி, வண்ணமுத்து, வணிக அலுவலா்கள் அண்ணாமலை, வினோத் மற்றும் ஆசிரியைகள், மாணவா்- மாணவிகள் பங்கேற்றனா்.