திருநெல்வேலி
களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி
களக்காடு தலையணையில் சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து குறைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டனா்.
களக்காடு மலையடிவாரத்தில் உள்ள தலையணை சூழல் சுற்றுலா பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா். இங்குள்ள பச்சையாற்றில் அண்மையில் பெய்த தொடா் மழையால் நீா்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து,
தடுப்பணை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், நீா்வரத்து சனிக்கிழமை குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினா் அனுமதி அளித்தனா்.
