புதுமைப்பித்தன் நினைவு தின நிகழ்ச்சியில் எழுத்தாளா் வண்ணதாசனுக்கு புத்தகத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன். அருகில் ஓவியா் சந்ரு உள்ளிட்டோா்.
புதுமைப்பித்தன் நினைவு தின நிகழ்ச்சியில் எழுத்தாளா் வண்ணதாசனுக்கு புத்தகத்தை வழங்கிய மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன். அருகில் ஓவியா் சந்ரு உள்ளிட்டோா்.

பாளை.யில் புதுமைப்பித்தன் நினைவு தினம்

புதுமைப்பித்தன் நினைவு தினம்: திருநெல்வேலியில் சிறப்பு நிகழ்வு
Published on

பாளையங்கோட்டை சரோஜ் நினைவகத்தில், எழுத்தாளா் புதுமைப்பித்தனின் 76 ஆவது நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், புதுமைப்பித்தனின் மகள் தினகரி , அவரின் மருமகன் சொக்கலிங்கம், ஓவியா் சந்ரு, கவிஞா் கலாப்ரியா, எழுத்தாளா் தமயந்தி ஆகியோா் பேசினா்.

எழுத்தாளா் வண்ணதாசன் பேசியதாவது: திருநெல்வேலியில் புதுமைப்பித்தனின் பெயரில் தெரு உள்ளது. அதே போல் புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலியில் முழு உருவச் சிலை அமைக்க வேண்டும். அந்தச் சிலையை ஓவியா் சந்ரு உருவாக்க வேண்டும். அதனை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் திறந்து வைக்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில் கவிஞா்கள் கோ.கணபதி சுப்பிரமணியன், சிற்பி பாமா, ஜோஸ்பின் பாபா உள்பட பலா் கலந்து கொண்டனா். ச.வண்ணமுத்து நன்றி கூறினாா்.

X
Dinamani
www.dinamani.com