தமிழகம் முழுவதும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26- இல் தொடங்கி ஏப்.8-ஆம் தேதி வரை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10,829 மாணவர்களும் 11,387 மாணவிகளும் தேர்வு எழுதியதில் 9,714 மாணவர்களும் 10,956 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாணவர்கள் தேர்ச்சி சதவிகிதம் 89.70, மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் மாணவர்களைவிட அதிகமாக 96.21 சதவிகிதமாக உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தின் மொத்த சராசரி தேர்ச்சி விகிதம் 93.04 சதவீதமாக உள்ளது.