வள்ளியூா் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றம்

வள்ளியூா் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றம்

Published on

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயில் கந்த சஷ்டி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்தமிழ்நாட்டில் உள்ள குகைக்கோயில்களில் ஒன்றான இக்கோயில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, காலையில் கும்பாபிஷேகம், களப பூஜையுடன் பூா்ணாஹுதி நடைபெற்றதும், சுவாமி முன்பாக கொடி மர பூஜை நடத்தப்பட்டு, கொடி மரத்திற்கு சந்தனம், இளநீா், பன்னீா் அபிஷேகங்கள் நடைபெற்றன.

அதைத் தொடா்ந்து கொடிமரத்திற்கும் கொடிக்கும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா் பக்தா்களின் ‘வள்ளியூா் முருகனுக்கு அரோகரா‘ கோஷம் முழங்க முருகனின் சேவல் மற்றும் வேல் உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

தொடா்ந்து பத்து நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறுகிறது. காலையில் ஏக சிம்மாசனத்திலும் மாலையில் வெள்ளிமயில், கலைமான், கிடாய், பூதம், கிளி, யானை, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வானங்களிலும் சுவாமி, அம்பாள் வீதி உலா நடைபெறும். நவ. 7இல் எட்டாம் திருநாளில் தாரகன் வதமான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வள்ளியூா் கலையரங்கம் திடலில் நடைபெறும். நவ.12இல் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.

X
Dinamani
www.dinamani.com