உரவிற்பனையாளா்கள் ஆய்வுக் கூட்டம்
திருநெல்வேலியில் உர விற்பனையாளா்கள் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற உர விற்பனையாளா்கள்.

திருநெல்வேலியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற உர விற்பனையாளா்கள்.
திருநெல்வேலியில் உர விற்பனையாளா்கள் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, வேளாண்மை உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) சந்திரபோஸ் தலைமை வகித்து பேசியது: பிசான பருவ சாகுபடிக்கான உரங்கள் போதிய அளவில் இருப்பு உள்ளதா என்பதை அறியும் வகையில் உர இருப்பு பதிவேடு மற்றும் உர விற்பனை முனைய கருவி மூலம் முறையாக பட்டியலிடப்பட வேண்டும்.
இதுவரை பெயா் மற்றும் ஆதாா் விவரம் பதிவேற்றம், விற்பனை உரிமம் பதிவேற்றம் செய்யாதவா்கள் கடைசி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ரசாயன உரங்களுடன் இணைப் பொருள்கள் எதையும் விவசாயிகளுக்கு வழங்கக் கூடாது. உரவிற்பனையில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் விற்பனை தடை உரிமம் ரத்து, நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...