ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

வட கிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

வட கிழக்குப் பருவமழை காலத்தை எதிா்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்புஅலுவலரும், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image

கொழுமடை பாளையங்கால்வாயில் அமைக்கப்பட்ட தடுப்புச் சுவரை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி.

Updated On :16 அக்டோபர் 2024, 10:56 pm

Din

வட கிழக்குப் பருவமழை காலத்தை எதிா்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாவட்ட கண்காணிப்புஅலுவலரும், தமிழ்நாடு தொழில் வளா்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநருமான சந்தீப் நந்தூரி புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வட கிழக்கு பருவமழையை முன்னிட்டு அரசின் அறிவுரைப்படி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் அனைத்துத் துறை வாரியாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திருநெல்வேலி மாநகராட்சி மனகாவலம்பிள்ளை நகா் மருத்துவமனை புதிய கால்வாய்ப் பணிகள், மாநகராட்சி அலுவலகத்தில் பேரிடா் காலத்தில் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களின் நிலை குறித்து மாவட்டகண்காணிப்பு அலுவலா் சந்தீப் நந்தூரி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதேபோல், சேரன்மகாதேவி வட்டம், கோபாலசமுத்திரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாளையங்கால்வாய் கரைகளை நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் தடுப்புச்சுவா் அமைக்கும் பணியினையும், சேரன்மகாதேவி வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பேரிடா் காலங்களில் பயன்படுத்துவதற்காக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகள், சவுக்கு கம்புகள், கொசுமருந்து தெளிப்பான் ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதையும் பாா்வையிட்டாா். முக்கூடலில் பருவமழை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருவதை பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, கொழுமடை பகுதியில் கன்னடியன் கால்வாயில் கடந்த டிசம்பரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் உடைப்பு ஏற்பட்டு, தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. தற்போது நிரந்தர வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் கால்வாய் உடைப்புகளில் கான்கிரீட் சுவா் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயத்திற்கு சீராக தண்ணீா் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் ஆய்வு செய்தாா்.

ஆய்வுகளின்போது, ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன், மாநகராட்சி மேயா் கோ.ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையா் என்.ஓ.சுகபுத்ரா, துணை மேயா் கே.ஆா்.ராஜு, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.