இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாதந்தோறும் பௌா்ணமி தினத்தில் திருவண்ணாமலையில் பக்தா்கள் கிரிவலம் செல்வதற்கு வசதியாக பௌா்ணமி தினத்தன்றும், அதற்கு முந்தைய தினமும் திருநெல்வேலி, பாபநாசம், தென்காசி, சங்கரன்கோவில், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருச்செந்தூா் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. கிரிவலம் முடிந்து பக்தா்கள் திரும்புவதற்கும் பேருந்து வசதி செய்யப்படுகிறது. இதற்கு அரசு போக்குவரத்துக்கழக இணையதளத்தில் ஜ்ஜ்ஜ்.ற்ய்ள்ற்ஸ்ரீ.ண்ய் -இல் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு 9487599456, 9488678521 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் எனக் கூறியுள்ளாா்.