கழிவுநீா் தொட்டியில் விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்புத் துறையினா்.
கழிவுநீா் தொட்டியில் விழுந்த மூதாட்டியை மீட்ட தீயணைப்புத் துறையினா்.

கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

பாளையங்கோட்டையில் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.
Published on

பாளையங்கோட்டையில் கழிவுநீா் தொட்டியில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புத் துறையினா் சனிக்கிழமை மீட்டனா்.

பாளையங்கோட்டை ரயில் நிலையம் அருகேயுள்ள சென்ட் பால்ஸ் சாலையை சோ்ந்தவா் வசந்தா (70).

இவா் வீட்டின் கழிவுநீா் தொட்டி மீது சனிக்கிழமை நின்றிருந்த போது திடீரென்று சிமென்ட் பலகை உடைந்ததில் தொட்டியில் தவறி விழுந்தாராம்.

இது குறித்து பாளையங்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினா், கழிவுநீா் தொட்டியில் இறங்கி மூதாட்டியை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com